×

இந்தியன் 2 படத்துக்கு டப்பிங் பேசிய கமல்ஹாசன்

சென்னை: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்த ‘இந்தியன்’ படம், கடந்த 1996 மே 9ம் தேதி திரைக்கு வந்தது. தற்போது 26 வருடங் களுக்குப் பிறகு மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்து முடித்துள்ள படம், ‘இந்தியன் 2’. கடந்த சில வருடங்களாக ஷூட்டிங் நடந்து வந்தது. ‘விக்ரம்’ படவெற்றிக்குப் பிறகு கமல்ஹாசன் நடித்துள்ள இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதில் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, மறைந்த நெடுமுடி வேணு, விவேக் உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைக்க, லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் பிரமாண்டமான முறையில் தயாரித்துள்ளார்.

பல்வேறு நாடுகளில் நடந்த படப்பிடிப்பு முடிவடைந்து, அமெரிக்காவில் விஎப்எக்ஸ் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், தற்போது ‘இந்தியன் 2’ படத்தின் டப்பிங் பணிகளை கமல்ஹாசன் தொடங்கியுள்ளார். இதுபற்றிபடக்குழு வெளியிட்டுள்ள வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் கமல்ஹாசன், ஷங்கர் இருவரும் டப்பிங் ஸ்டுடியோவில் இருக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. சேனாபதி கதாபாத்திரத்துக்கு கமல்ஹாசன் டப்பிங் பேசி வருகிறார்.

இப்படம் திரைக்கு வரும் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகிறது. இப்படத்தை தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படத்துக்கான பணிகள் நடந்து வருகின்றன. இப்படத்துக்காக கமல்ஹாசன் துப்பாக்கி சுடும் பயிற்சியை மேற்கொண்டார். இது கமல்ஹாசன் நடிக்கும் 233வது படமாகும். தவிர பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் நடிக்கும் ‘கல்கி 2989 ஏடி’ என்ற பான் இந்தியா படத்தில் வில்லன் கேரக்டர் ஏற்றுள்ள அவர், ‘நாயகன்’ படத்துக்குப் பிறகு மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கிறார். கமல்ஹாசனின் 234வது படமான இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.

The post இந்தியன் 2 படத்துக்கு டப்பிங் பேசிய கமல்ஹாசன் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Kamal Haasan ,Chennai ,Shankar ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED உத்தமவில்லன் பட விவகாரம் தொடர்பாக...